நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு பூஜை
நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு பூஜை.
நாமக்கல்,
கொரோனா பரவலை தடுக்க கோவில்கள் மூடப்பட்டு உள்ளன. இருப்பினும் ஆகம விதிப்படி சாமிக்கு தினசரி பூஜை நடத்தப்பட்டு வருகிறது. இதில் பக்தர்கள் அனுமதிக்கப்படுவது இல்லை.
நாமக்கல் நகரின் மைய பகுதியில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இங்கு ஒரே கல்லில் செதுக்கப்பட்ட 18 அடி உயர ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இந்த கோவிலில் தினமும் அபிஷேகம் மற்றும் பூஜை நடந்து வருகிறது. நேற்று ஆனி மாத முதல் ஞாயிற்றுக்கிழமையையொட்டி சாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடத்தப்பட்டது. இதையொட்டி அதிகாலையில் நடை திறக்கப்பட்டு சாமிக்கு 1,008 வடைமாலை சாத்தப்பட்டது. பின்னர் பட்டாச்சாரியார்கள் குடம், குடமாக பால் ஊற்றி ஆஞ்சநேயருக்கு அபிஷேகம் செய்தனர். தொடர்ந்து எண்ணெய், பஞ்சாமிர்தம், மஞ்சள், சீயக்காய் உள்ளிட்ட நறுமண பொருட்களால் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் தங்ககவச அலங்காரத்தில் ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கோவிலுக்கு வெளியே நின்று பக்தர்கள் சிலர் சாமி தரிசனம் செய்து சென்றதை பார்க்க முடிந்தது.
Related Tags :
Next Story