போக்குவரத்து இல்லாததால் நொய்யல் பகுதிகளில் பூக்கள் விலை கடும் வீழ்ச்சி
போக்குவரத்து இல்லாததால் நொய்யல் பகுதிகளில் பூக்கள் விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது.
நொய்யல்
பூக்கள்
கரூர் மாவட்டம் நொய்யல், சேமங்கி, குளத்துப்பாளையம், ஓலப்பாளையம், ஒரம்புப்பாளையம், நல்லிக்கோவில், கவுண்டன்புதூர், நடையனூர், பேச்சிப்பாறை, கொங்கு நகர், மூலிமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் குண்டுமல்லி, முல்லை, சம்பங்கி, அரளி, ரோஜா, செவ்வந்தி மற்றும் பல்வேறு வகையான பூக்களை விவசாயிகள்பயிரிட்டுள்ளனர்.
பூக்கள் பூக்கும் தருவாய்க்கு வரும்போது கூலி ஆட்கள் மூலம் பறித்து லேசான கோணிப் பைகளில் போட்டு உள்ளூர் பகுதிகளுக்கு வரும் பூ வியாபாரிகளுக்கும், அருகாமையில் பரமத்தி வேலூரில் செயல்பட்டு வரும் 2 தினசரி பூ மார்க்கெட்டிற்கும் கொண்டு சென்று விற்பனை செய்து வந்தனர்.
விலை வீழ்ச்சி
பூக்களை வாங்கிய பூ வியாபாரிகள் பலர் பல்வேறு வகையான மாலைகளும், தோரணங்களும் கட்டி விற்பனை செய்து வருகின்றனர். அதேபோல் சிறு வியாபாரிகள் வாங்கிய உதிரிப் பூக்களை பிளாஸ்டிக் பையில் போட்டு பொட்டலங்களாக ஊர் பகுதிகளுக்கு சென்று விற்பனை செய்து வருகின்றனர்.
தற்போது கொரோனா ஊரடங்கு உத்தரவால் போக்குவரத்து இல்லை. இதனால் மார்க்கெட்டுகளில் பூக்கள் ஏலம் விடப்படவில்லை. திருமணம் மற்றும் கோவில்களில் விசேஷங்கள் இல்லாததாலும் பூக்களின் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது.
பூக்கள் விலை நிலவரம்
இதன் காரணமாக கடந்த வாரங்களில் குண்டு மல்லி பூ ஒரு கிலோ ரூ.250-க்கு விற்றது தற்போது ரூ.160-க்கும், முல்லைப்பூ ரூ250-க்கு விற்றது ரூ.160-க்கும், சம்பங்கி ரூ150-க்கு விற்றது ரூ. 50-க்கும், அரளி ரூ.150-க்கு விற்றது ரூ.100-க்கும்,, ரோஜா ரூ.200-க்கு விற்றது ரூ.150-க்கும், செவ்வந்தி ரூ.250-க்கு விற்றது ரூ.150-க்கும் விற்பனை ஆகிறது.
மேலும், விற்பனையும் எதிர்பார்த்த அளவு இல்லாததால் விவசாயிகள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர்.
Related Tags :
Next Story