அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு கூடுதல் தடுப்பூசி வினியோகிக்க வேண்டும்
பற்றாக்குறை காரணமாக தினமும் பலர் ஏமாற்றத்துடன் திரும்பு வதால் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு கூடுதல் தடுப்பூசி வினியோகிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
கிணத்துக்கடவு
பற்றாக்குறை காரணமாக தினமும் பலர் ஏமாற்றத்துடன் திரும்பு வதால் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு கூடுதல் தடுப்பூசி வினியோகிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
கொரோனா தடுப்பூசி
கிணத்துக்கடவு தாலுகா பகுதிகளில் கொரோனா பரவலை கட்டுப் படுத்த இங்குள்ள நல்லட்டிபாளையம், சொக்கனூர், வடசித்தூர் ஆகிய அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
தடுப்பூசிகள் மிகக்குறைந்த அளவிலே அனுப்பி வைக்கப்படுவதாக கூறப்படுகிறது. ஆனால் தடுப்பூசி போடுவது தெரியவந்ததும், ஏராள மான பொதுமக்கள் ஆரம்ப சுகாதார நிலையங்களில் குவிவதால், குறைந்த நபர்களுக்கு மட்டுமே டோக்கன் கொடுத்து தடுப்பூசி போடப்படுகிறது.
பொதுமக்கள் ஏமாற்றம்
இதனால் தினமும் ஏராளமான பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச்செல்லும் நிலை நீடித்து வருகிறது.
எனவே ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு கூடுதல் தடுப்பூசி அனுப்பி வைக்க பொது மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-
கொரோனா தடுப்பூசி போடுவதில் தற்போது கிராம மக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட்டு வருகிறது. இதனால் அவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்வதில் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
அத்துடன் கூட்டமாக ஒரே இடத்தில் பொதுமக்கள் குவிவதால், மேலும் தொற்று பரவும் நிலை ஏற்படுகிறது.
கூடுதலாக வினியோகம்
இதைத்தடுக்க, வீடுகள் தோறும் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டு, தடுப்பூசி போட விருப்பம் உள்ளவர்களுக்கு தேதி, நேரம் குறிப்பிடப் பட்ட டோக்கன் வினியோகம் செய்தால், ஒரே இடத்தில் பொதுமக்கள் குவிவதை தடுக்கலாம்.
எனவே மாவட்ட நிர்வாகம் இதுபோன்ற நடவடிக்கையை பரிசீலனை செய்து, ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு கூடுதலாக தடுப்பூசிகளை வினியோகித்து அனைவருக்கும் தடுப்பூசி போட வழிவகை செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Related Tags :
Next Story