ஊரடங்கை மீறிய 266 பேர் மீது வழக்குப்பதிவு
ஊரடங்கை மீறிய 266 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கரூர்
கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு தமிழகத்தில் வருகிற 28-ந்தேதி வரை சில தளர்கவுடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்தநிலையில் நேற்று மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டதில், முககவசம் அணியாமல் வெளியிடங்களுக்கு வந்த 197 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அபராதமாக ரூ.39 ஆயிரத்து 400-ம், பொது இடங்கள் கடைகள் போன்ற இடங்களில் சமூக இடைவெளியை பின்பற்றாதவர்கள் மீது 37 வழக்குகள் பதியப்பட்டு அபராதமாக ரூ.18 ஆயிரத்து 500 வசூலிக்கப்பட்டது. அதேபோல, ஊரடங்கை மீறி இருசக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் சுற்றித் திரிந்த 25 பேர் மீது வழக்குகள் பதியப்பட்டன. மேலும், மது பாட்டில்களை பதுக்கி விற்றதாக 8 பேர் கைது செய்யப்பட்டனர். 88 மதுப்பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும் 5 லிட்டர் தென்னை கள்ளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story