டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து திருட முயற்சி
பொள்ளாச்சி அருகே டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து திருட முயன்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
பொள்ளாச்சி
பொள்ளாச்சி அருகே டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து திருட முயன்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
டாஸ்மாக் கடைகள் மூடல்
கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. கோவை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் தொற்று அதிகமாக இருப்ப தால் இங்கு டாஸ்மாக் கடைகள் திறக்கப்படவில்லை.
மற்ற மாவட்டங் களில் மதுக்கடைகள் திறக்கப்பட்டு உள்ளன. இதனால் பொள்ளாச்சி மற்றும் அதைச்சுற்றி உள்ள பகுதிகளை சேர்ந்த மதுபான பிரியர்கள், திண்டுக்கல் மற்றும் அருகே உள்ள கேரள மாநிலத்துக்கு சென்று மதுபானங்களை வாங்கி வருகிறார்கள்.
திருட முயற்சி
இந்த நிலையில் பொள்ளாச்சி அருகே உள்ள கோவிந்தனூர் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையின் (எண் 1899) பூட்டு உடைக்கப்பட்ட நிலை யில் இருந்தது. இது குறித்து தகவல் அறிந்த கடையின் விற்பனையாளர் செந்தில்குமார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றார்.
பின்னர் அவர் கடையை திறந்து உள்ளே இருந்த மதுபானங்களின் இருப்புகளை சரிபார்த்தார். ஆனால் எந்த மதுபானங்களும் திருடப்பட வில்லை.
இந்த திருட்டு முயற்சி குறித்து அவர் வடக்கிபாளையம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.
2 பேர் கைது
அத்துடன் போலீசார் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திர பிரசாத் தலைமையில் போலீசார் ரோந்து சென்றனர்.
அவர்கள் வடக்கிபாளையம் பிரிவு அருகே வந்தபோது அங்கு 2 பேர் சந்தேகத்துக்கு இடமாக நின்றிருந்தனர்.
உடனே போலீசார் 2 பேரையும் பிடித்து விசாரணை செய்தனர். அதில் அவர்கள், கோவிந்தனூரை சேர்ந்த கருப்புசாமி (வயது 26), விவேக் (26) என்பதும், டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து திருட முயற்சி செய்ததும் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் 2 பேரையும் கைது செய்தனர்.
கைதான 2 பேரும் அளித்துள்ள வாக்குமூலம் குறித்து போலீசார் கூறியதாவது:-
டார்ச் லைட் வெளிச்சம்
தற்போது டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு உள்ளதால், 2 பேரும் மதுபானத்துக்கு பல இடங்களில் சுற்றி உள்ளனர். ஆனால் கிடைக்க வில்லை. சில இடங்களில் கிடைத்தாலும் அதிக விலைக்கு விற்கப்பட்ட தால் அதை வாங்க அவர்களுக்கு மனம் வரவில்லை.
எனவே 2 பேரும் கடையை உடைத்து திருட முடிவு செய்து, டாஸ் மாக் கடைக்கு சென்று பூட்டை உடைத்து உள்ளனர். ஷட்டரை திறந்து உள்ளே செல்ல முயற்சித்தபோது, அந்தப்பகுதியில் யாரோ ஒருவர் டார்ச் லைட்டை அடித்து உள்ளார்.
எனவே தாங்கள் சிக்கிவிடுவோம் என்று நினைத்து திருடாமல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர் என்று போலீசார் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story