தொண்டர்கள் இடையே குழப்பத்தை விளைவிக்கும் சசிகலாவுக்கு கண்டனம்
தொண்டர்கள் இடையே குழப்பத்தை விளைவிக்கும் சசிகலாவுக்கு கண்டனம்
கோவை
சாதிய உணர்வுகளை தூண்டும் விதமாக பேசி தொண்டர்கள் இடையே குழப்பத்தை விளைவிக்க முயற்சிக்கும் சசிகலாவுக்கு கண்டனம் தெரிவித்து கோவை அ.தி.மு.க. கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.
ஆலோசனை கூட்டம்
கோவை புறநகர் தெற்கு, வடக்கு மற்றும் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் கோவை ஹூசூர் ரோடு இதயதெய்வம் மாளிகையில் நேற்று நடைபெற்றது.
இதற்கு அக்கட்சியின் கொறடாவும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.வேலுமணி தலைமை தாங்கினார்.
மாநகர் மாவட்ட செயலாளர் அம்மன் அர்ச்சுனன் எம்.எல்.ஏ., வடக்கு மாவட்ட செயலாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் எம்.எல்.ஏ., அமுல் கந்தசாமி எம்.எல்.ஏ., கே.ஆர்.ஜெயராம் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன, பல கட்சி கூட்டணி, பல ஆயிரம் கோடி செலவு, பகட்டான வாக்குறுதிகள் என மக்களிடம் நாடகமாடி தேர்தலை சந்தித்து தி.மு.க. மற்றும் எதிர் அணியினர் மிக குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தான் வெற்றி பெற்றிருக்கிறார்கள்.
சூழ்ச்சிகள், தந்திரங்கள், சதி செயல்கள் அனைத்தையும் முறியடித்து மக்களின் பேரன்பை பெற்று அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி 75 இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறது.
பிரதான எதிர்கட்சியாக அ.தி.மு.க.வின் 66 எம்.எல்.ஏ.க்கள் தமிழகத்தின் நலனுக்காக சட்டமன்றத்தில் உரக்க குரல் எழுப்பி, உண்மையான மக்கள் தொண்டர்களாக பணியாற்ற துடித்து கொண்டு இருக்கின்றனர்.
அரசியலில் முக்கியத்துவம்
இந்த சூழ்நிலையில் சட்டமன்ற தேர்தலின் போது தான் அரசியலில் இருந்து முழுமையாக விலகி இருப்பதாக ஊடகங்கள் மூலம் சசிகலா பகிரங்கமாக அறிவித்தார்.
ஆனால் அவர் சட்டமன்ற தேர்தல் முடிவிற்கு பிறகு அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோரது தலைமையில் அ.தி.மு.க. இவ்வளவு வலுவும், தொண்டர்கள் பெரும்படையும், மக்கள் செல்வாக்கும் பெற்றிருப்பதை பார்த்ததும், அரசியலில் முக்கியத்துவத்தை தேடி கொள்ள அ.தி.மு.க.வை அபகரிக்கும் முயற்சியில் இறங்கப்போவதாக ஒவ்வொரு நாளும் தொலைபேசியில் சிலருடன் பேசுவதாக வினோதமான நாடகத்தை அரங்கேற்றி வருகிறார்.
சசிகலா அ.தி.மு.க.வில் அடிப்படை உறுப்பினராக கூட இல்லை.
சசிகலா தொலைபேசியில் சாதிய உணர்வுகளை தூண்டும் விதமாக பேசுவது ஒரு தாய் வயிற்று பிள்ளைகளாக வாழ்ந்து வரும் அ.தி.மு.க. தொண்டர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிப்பதற்கு இக்கூட்டம் கடும் கண்டனத்தை தெரிவித்து கொள்கிறது.
வஞ்சக வலை விரிப்பு
மேலும் தொண்டர்களின் உழைப்பை சுரண்டும் ஒட்டுண்ணிகளாக வும், நற்பெயரை அழிக்கும் நச்சுக்களைகளாகவும், தங்களை வளப்ப டுத்தி கொண்ட ஒரு குடும்பத்தினர் மீண்டும் அ.தி.மு.க.வை அபகரித்து விடலாம் என்று வஞ்சக வலை விரிக்கின்றனர்.
மக்கள் போற்றும் தலை வர்களான எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரால் புகழ்பெற்ற அ.தி.மு.க. ஒரு குடும்பத்தின் அபிலாஷைகளுக்கு ஒரு போதும் அடிபணியாது. அ.தி.மு.க.விற்கும், சசிகலாவிற்கும் எந்தவித தொடர்போ, சம்பந்தமோ இல்லை என்பதை இந்த கூட்டம் தெரிவித்து கொள்கிறது.
அ.தி.மு.க.வில் குழப்பம் ஏற்படுத்தும் வகையிலும், வெந்த புண்ணில் வேல்பாய்ச்சும் விதத்திலும் செயல்பட்டு கொண்டிருக்கும் சசிகலாவுடன் தொலைபேசியில் பேசிய கழகத்தை சேர்ந்தவர்களை அ.தி.மு.க.வில் இருந்து நீக்கியததை கோவை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் வரவேற்கிறோம்.
தடுப்பூசி
கோவை மாநகராட்சி மற்றும் அனைத்து பேரூராட்சிகளிலும் த டுப்பூசி போடப்படும் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்.
கோவை கிராமங்களில் உள்ள பொதுமக்களுக்கு தடுப்பூசி போடுவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
தமிழ்நாடு 16-வது சட்டப்பேரவையின் அ.தி.மு.க. கொறடாவாக எஸ்.பி.வேலுமணியை தேர்வு செய்த, எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கும், துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வத்திற்கும் அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கும் இக்கூட்டம் நன்றி தெரிவித்து கொள்கிறது.
இறப்பு சான்றிதழ்
சுப்ரீம் கோர்ட்டு மற்றும் ஐகோர்ட்டு அறிவுரைப்படி கொரோனா தொற்றால் இறந்தவர்களின் இறப்பு சான்றிதழ்களில் உண்மையான காரணத்தை குறிப்பிட வேண்டும் என தமிழக அரசை இக்கூட்டம் வலியுறுத்துகிறது.
அ.தி.மு.க. மற்றும் கழக தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் மீது போலீசார் மூலம் பொய் வழக்குகள் போடும் தி.மு.க. அரசை இக்கூட்டம் வன்மையாக கண்டிக்கிறது.
முன்னாள் முதல்-அமைச்சர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா அகியோரின் பொற்கால ஆட்சியை கடந்த 4 ஆண்டுகளில் வழிநடத்தி அற்புத திட் டங்களை தந்த எடப்பாடி பழனிசாமிக்கும், அவருக்கு உறுதுணையாக இருந்த ஓ.பன்னீர் செல்வத்திற்கும், தொடர்ந்து 3-வது முறையாக ஆட்சி அமைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் கோவை மாவட்டத்தில் எஸ்.பி.வேலுமணி தலைமையில் 10 சட்டமன்ற தொகுதிகளில் தமிழ்நாடே உற்றுநோக்கும் வகையில் 100 சதவீதம் வெற்றி பெற்றுத்தந்த பொதுமக்களுக்கும், கழகம், சார்பு அணிகள், தோழமை கட்சியின ருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்வது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Related Tags :
Next Story