ஊராட்சி செயலாளருக்கு மிரட்டல்
ஊராட்சி செயலாளருக்கு மிரட்டல் விடுத்தவர் மீது வழக்குப்பதிந்து போலீசார் விசாரித்து வருகின்றனர்
தேவகோட்டை
தேவகோட்டை அருகே உள்ள குருந்தனக்கோட்டை ஊராட்சியை சேர்ந்தவர் சுப்புராமு.. இவர் சென்னையில் தொழில் செய்து வந்தார். தற்போது கொரோனா காலம் என்பதால் ஊரில் இருந்து வருகிறார். இந்நிலையில் குருந்தனக்கோட்டை கிராமத்தில் பஞ்சாயத்து அனுமதி இல்லாமல் இவரே சொந்தமாக தெரு விளக்கு போட்டாராம். இதுபற்றி அந்த கிராம ஊராட்சி செயலாளர் மாரிமுத்து (47) பஞ்சாயத்து அனுமதி இல்லாமல் தெரு விளக்கு ஏன் போட்டீர்கள் என கேட்டாராம்.இதனால் ஆத்திரமடைந்த சுப்புராமு ஊராட்சி செயலாளர் மாரிமுத்துவை அசிங்கமாக பேசி மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.இது குறித்து மாரிமுத்து தேவகோட்டை தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் சுப்புராமு மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story