பாதையை ஆக்கிரமித்து கட்டிய கடைகளை ஒன்று திரண்டு சூறையாடிய கிராமமக்கள்
மானாமதுரை அருகே பாதையை ஆக்கிரமித்து கட்டிய கடைகளை ஒன்று திரண்டு கிராமமக்கள் அடித்து நொறுக்கி சூறையாடியதால் பரபரப்பு ஏற்பட்டது.
மானாமதுரை
மானாமதுரை அருகே பாதையை ஆக்கிரமித்து கட்டிய கடைகளை ஒன்று திரண்டு கிராமமக்கள் அடித்து நொறுக்கி சூறையாடியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கடைகள்
மானாமதுரை அருகே முத்தனேந்தல் கிராமத்தில் அரசுக்கு சொந்தமான கிராமத்திற்கு செல்லும் ரோட்டில் பாதையை மறித்து கடை போட்டு உள்ளனர். பல ஆண்டுகளாக அந்த கிராம மக்கள் கடையை அகற்ற வலியுறுத்தி வந்தனர். ஆனால் கடை அகற்றப்படவில்லை. வருவாய் துறை அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் ஆகியோரிடம் வலியுறுத்தியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
சில நாட்கள் முன்பு பாதையை ஆக்கிரமித்து கடை அமைத்தவர்கள், கிராம தலைவரின் மகன் வேல்முருகனை தாக்கியதாக தெரிகிறது. இதுகுறித்து மானாமதுரை போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. ஆனால் அந்த புகார் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் ஏமாற்றம் அடைந்த கிராமத்தினர் திடீரென ஒன்று திரண்டு பாைதை மறித்து நடத்தப்பட்டு வந்த டீக்கடை, காய்கறிகடையை அகற்ற கோரினர். மேலும் ஆத்திரத்தில் அந்த கடைகளை அடித்து நொறுக்கி சூறையாடினர். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது.
போராட்டம்
மானாமதுரை போலீசார், வருவாய்த்துறை அதிகாரிகள் உடனடியாக வந்து கிராம மக்களிடத்தில் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஒரு ஆண்டுகள் மேலாக ஆக்கிரமிப்பு செய்த கடைகளை காலி செய்ய சொல்லி பல முறை புகார் கொடுத்தும் நீங்கள் நடவடிக்கைகள் எடுக்கவில்லை. மீண்டும் அந்த இடத்தில் கடைகளை அமைக்க கூடாது என கூறினர்.
மேலும் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அதிகாரிகள் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதைதொடர்ந்து கிராமமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story