ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதிகளில் நிரம்பி வழியும் கிணறுகள்


ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதிகளில் நிரம்பி வழியும் கிணறுகள்
x
தினத்தந்தி 21 Jun 2021 12:45 AM IST (Updated: 21 Jun 2021 12:45 AM IST)
t-max-icont-min-icon

தொடர்மழை எதிரொலி காரணமாக ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதிகளில் கடந்த 8 மாதங்களாக கிணறுகள் நிரம்பி வழிவதால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர்,
தொடர்மழை எதிரொலி காரணமாக ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதிகளில் கடந்த 8 மாதங்களாக கிணறுகள் நிரம்பி வழிவதால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர். 
தொடர்மழை 
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே  மம்சாபுரம் உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப்பகுதியில் உள்ள இந்த பகுதிகளில் ஏராளமான கிணறுகள் உள்ளன.
 இந்த கிணறுகளில் சுமார் 8 மாதமாக தண்ணீர் குறையாமல் உள்ளது. இதனால் அந்த பகுதியில் நிலத்தடி நீர்மட்டமும் உயர்ந்து காணப்படுகிறது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்தது. 
தொடர்மழையினால் மலைப்பகுதியில் உள்ள தண்ணீரானது அடிவார பகுதி வரை வந்தது. இதனால் அடிவாரப்பகுதியில் உள்ள கண்மாய்கள், குளங்கள் நிரம்பின. 
விவசாயிகள் மகிழ்ச்சி 
இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது:-
மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வந்தது. இதனால் அடிவார பகுதியில் உள்ள மம்சாபுரம் வாழை குளம் கண்மாய் 5  முறை நிரம்பியது. அதேபோல குளங்கள், கிணறுகளும் நிரம்பின.  
 இந்த பகுதிகளில் உள்ள 50-க்கும் மேற்பட்ட கிணறுகள் கடந்த 8 மாதமாக வற்றாமல் நிரம்பி வழிகிறது. இதனால் இந்த பகுதியில் நிலத்தடி நீர்மட்டமும் வெகுவாக உயர்ந்து காணப்படுகிறது. இதனால் மகிழ்ச்சியுடன், விவசாய பணிகளை மேற்கொண்டு வருகிறோம். 
இவ்வாறு அவர்கள் கூறினர். 

Next Story