இன்றும், நாளையும் மின்சாரம் நிறுத்தம்


இன்றும், நாளையும் மின்சாரம் நிறுத்தம்
x
தினத்தந்தி 21 Jun 2021 12:48 AM IST (Updated: 21 Jun 2021 12:48 AM IST)
t-max-icont-min-icon

பராமரிப்பு பணிகளுக்காக சிவகாசியில் இன்றும், நாளையும் கீழ்க்கண்ட பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

சிவகாசி, 
பராமரிப்பு பணிகளுக்காக சிவகாசியில் இன்றும், நாளையும் கீழ்க்கண்ட பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படுகிறது. 
சாத்தூர் 
மின்சார வாரியத்தின் சிவகாசி பகிர்மான செயற்பொறியாளர் முரளிதரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சிவகாசி கோட்டத்தில் உள்ள சாத்தூர், சிவகாசி, ஏழாயிரம்பண்ணை ஆகிய துணை மின் நிலையங்களில் இருந்து மின்சாரம் பெறும் சாத்தூர் பைபாஸ் ரோடு, அண்ணா நகர், படந்தால், மேட்டமலை, வெங்கடாசலபுரம், ஹவுசிங் போர்டு, ஓ.மேட்டுப்பட்டி, சடையம்பட்டி, சத்திரப்பட்டி, அமீர் பாளையம், புதுப்பாளையம், சிவகாசி பழனியாண்டவர்புரம், ரத்தினவிலாஸ், பழைய விருதுநகர்ரோடு, சாமிபுரம் காலனி, உசேன்காலனி, சோலைகாலனி, பழைய போஸ்ட்ஆபிஸ் தெரு, பி.கே.என்.ரோடு, ஏழாயிரம்பண்ணை, ரெட்டியாபட்டி, ஊத்துப்பட்டி, சாணாகுளம், கோவில் செல்லையாபுரம், கீழ செல்லையா புரம், கிருஷ்ணாபுரம் ஆகிய பகுதிகளில் இன்று (திங்கட்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை பராமரிப்பு பணிக்காக மின்சாரம் நிறுத்தப்படுகிறது. 
நாளை மின்தடை 
இதேபோல் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை அனுப்பன்குளம், சிவகாசி இ.எஸ்.ஐ., ந.சுப்பையாபுரம் ஆகிய துணை மின்நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதனால் அனுப்பன்குளம் வடப்பகுதி, ஆண்டியாபுரம், நாரணாபுரம், நாரணாபுரம் புதூர், ஜமீன்சல்வார்பட்டி, புச்சக் காபட்டி, செங்கமலப்பட்டி, ஆலமரத்துப்பட்டி, செல்லையா நாயக்கன்பட்டி, லட்சுமியாபுரம், சிவகாசி லட்சுமிநகர், தொழிற் பேட்டை, சக்திநகர், அம்மன்நகர், மகாத்மாகாந்திநகர், தேவர் குளம்ரோடு, இ.பி.காலனி, ந.சுப்பையாபுரம், நள்ளி, உப்பத்தூர், கரிசல்பட்டி, நல்லமுத்தான்பட்டி, முள்ளிச்சேவல், சாமிநத்தம், சமத்துவபுரம், பெரியஓடைப்பட்டி, பெத்துரெட்டியபட்டி, கஞ்சம் பட்டி, தொட்டிலோவன்பட்டி, மீனாட்சிபுரம், என்.வெங்கடேஷ்வர புரம் ஆகிய இடங்களில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story