தாமிரபரணி ஆற்றில் மூழ்கி டிரைவர் சாவு
நெல்லை அருகே நண்பர்களுடன் குளிக்க சென்றபோது தாமிரபரணி ஆற்றில் மூழ்கி டிரைவர் பரிதாபமாக இறந்தார்.
நெல்லை:
நெல்லை அருகே நண்பர்களுடன் குளிக்க சென்றபோது தாமிரபரணி ஆற்றில் மூழ்கி டிரைவர் பரிதாபமாக இறந்தார்.
டிரைவர்
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 39), டிரைவர். இவர் நேற்று முன்தினம் தனது நண்பர்கள் 5 பேருடன், நெல்லை அருகே சீவலப்பேரியில் உள்ள தாமிரபரணி ஆற்றில் குளிக்க சென்றார்.
அப்போது மாரியப்பனும், அவருடைய நண்பர் இளங்கோவும் ஆற்றில் இறங்கி குளித்துக் கொண்டிருந்தனர். மற்ற 4 பேரும் உணவு வாங்குவதற்காக அருகே உள்ள கடைக்கு சென்று இருந்ததாக தெரிகிறது.
ஆற்றில் மூழ்கினார்
இந்த நிலையில் மாரியப்பன் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தபோது, ஆழமான பகுதிக்கு சென்றதாக தெரிகிறது. அப்போது திடீரென அவர் தண்ணீரில் மூழ்கினார்.
இதனால் பதறிப்போன இளங்கோ சம்பவம் குறித்து சீவலப்பேரி போலீசில் தகவல் தெரிவித்தார். உடனே போலீசார் பாளையங்கோட்டை தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசாரும், தீயணைப்பு துறையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். ஆற்றில் இறங்கி மாரியப்பனை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். இரவு வரை தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.
பிணமாக மீட்பு
பின்னர் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் நேற்று காலை மீண்டும் மாரியப்பனை தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது மாரியப்பன் பிணமாக மீட்கப்பட்டார். பின்னர் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story