லாரி டிரைவர்களிடம் மாமூல் வசூல் புகார் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் உள்பட 4 பேர் ஆயுதப்படைக்கு மாற்றம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நடவடிக்கை
லாரி டிரைவர்களிடம் மாமூல் வசூல் செய்ததாக வந்த புகாரையடுத்து போக்குவரத்து இன்ஸ்பெக்டர் உள்பட 4 பேரை ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நடவடிக்கை எடுத்தார்.
சேலம்:
சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபடும் போக்குவரத்து போலீசார் லாரிகளை மடக்கி டிரைவர்களிடம் மாமூல் வசூல் செய்வதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு புகார்கள் வந்தது. சமீபத்தில் பணம் தராத லாரி கிளீனர் ஒருவரை தாக்கியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக போலீஸ் உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
இந்நிலையில், லாரி டிரைவரிடம் மாமூல் வசூல் செய்த புகாரின் பேரில் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் செல்வமணி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டரான மற்றொரு செல்வமணி, ஏட்டுகள் ராஜா, செல்வம் ஆகிய 4 பேரை மாவட்ட ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்து போலீஸ் சூப்பிரண்டு அபினவ் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை தரவும் ஓமலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கீதாவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்பேரில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
Related Tags :
Next Story