கட்டிட தொழிலாளி தற்கொலை
களக்காட்டில் தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
களக்காடு:
களக்காடு ஜவகர் வீதியை சேர்ந்தவர் முருகன் மகன் சொரிமுத்து (வயது 36) கட்டிட தொழிலாளி. இவருக்கும் சிங்கம்பத்தை சேர்ந்த முத்துமாரி என்பவருக்கும் கடந்த 2009-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு குழந்தைகள் இல்லை.
இந்த நிலையில் சொரிமுத்துக்கு மது அருந்தும் பழக்கம் ஏற்பட்டதால் அடிக்கடி மது அருந்தி விட்டு, போதையில் வீட்டிற்கு வந்துள்ளார். இதனால் அவருக்கும், அவரது மனைவி முத்துமாரிக்கும் தகராறு ஏற்பட்டது. கடந்த ஜனவரி மாதம் கணவருடன் ஏற்பட்ட தகராறில் முத்துமாரி அவரை பிரிந்து சென்று விட்டார்.
இதனைதொடர்ந்து சொரிமுத்து தனது தாயார் கோமுவுடன் வசித்து வந்தார். கடந்த 17-ந் தேதி சொரிமுத்து தனது தாயாரிடம் வெளியூர் வேலைக்கு செல்வதாக கூறி விட்டு சென்றார். ஆனால் வெளியூருக்கு செல்லாமல் களக்காடு புதிய பஸ் நிலையம் அருகே விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக களக்காடு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி சொரிமுத்து இறந்தார். இதுகுறித்து களக்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story