மின் மோட்டார் திருடிய 2 பேர் கைது


மின் மோட்டார் திருடிய 2 பேர் கைது
x
தினத்தந்தி 21 Jun 2021 1:09 AM IST (Updated: 21 Jun 2021 1:09 AM IST)
t-max-icont-min-icon

விருதுநகரில் மின்மோட்டார் திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

விருதுநகர், 
விருதுநகர் குருநாதன் கோவில் தெருவை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (வயது42). இவருக்கு சொந்தமான தோட்டம் விருதுநகர் அருகே உள்ள சின்ன மருளூத்து கிராமத்தில் உள்ளது. அவர் நேற்று குடும்பத்துடன் தோட்டத்திற்கு சென்றபோது தோட்டத்தில் இருந்த மின் மோட்டாரை காணவில்லை. இதுபற்றி அவர் கிராமத்தில் விசாரித்த போது அதே கிராமத்தை சேர்ந்த மோகன்தாஸ் (45) மற்றும் வீரபிரகாஷ் (27) ஆகிய இருவரும் ஒரு இருசக்கர வாகனத்தில் மின் மோட்டாரை திருடி ஒரு சாக்குப்பையில் வைத்து எடுத்து சென்றது தெரியவந்தது. அதன்பேரில் சுரேஷ்குமார் வச்சக்காரப்பட்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை மேற்கொண்டு மின் மோட்டாரை திருடியதாக மோகன்தாஸ் மற்றும் வீரபிரகாசை கைது செய்து வழக்குப்பதிவு செய்து காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

Next Story