சேலம் வழியாக பிலாஸ்பூர்-எர்ணாகுளம் சிறப்பு ரெயில் இயக்கம்


சேலம் வழியாக  பிலாஸ்பூர்-எர்ணாகுளம் சிறப்பு ரெயில் இயக்கம்
x
தினத்தந்தி 21 Jun 2021 1:10 AM IST (Updated: 21 Jun 2021 1:10 AM IST)
t-max-icont-min-icon

சேலம் வழியாக பிலாஸ்பூர்-எர்ணாகுளம் சிறப்பு ரெயில் வருகிற 28-ந்தேதி முதல் இயக்கப்படுகிறது.

சூரமங்கலம்:
ரெயில் பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக சேலம் வழியாக பிலாஸ்பூர்-எர்ணாகுளம் இடையே (வண்டி எண் 08227) வாராந்திர அதிவிரைவு சிறப்பு ரெயில் வருகிற 28-ந் தேதி முதல் இயக்கப்படுகிறது. அதன்படி இந்த ரெயில், பிலாஸ்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து திங்கட்கிழமைதோறும் காலை 8.15 மணிக்கு புறப்பட்டு வாராங்கல், விஜயவாடா, ரேணிகுண்டா, காட்பாடி, ஜோலார்பேட்டை வழியாக செவ்வாயக்்கிழமை இரவு 12.47 மணிக்கு சேலம் வந்தடையும். பின்னர் இங்கிருந்து 12.50 மணிக்கு புறப்பட்டு ஈரோடு, திருப்பூர், கோவை வழியாக செவ்வாய்க்கிழமை இரவு 10.15 மணிக்கு எர்ணாகுளம் சென்றடையும். இதேபோல் மறுமார்க்கத்தில் எர்ணாகுளம்- பிலாஸ்பூர் (வண்டி எண் 08228) வாராந்திர அதிவிரைவு சிறப்பு ரெயில் எர்ணாகுளம் ரெயில் நிலையத்தில் இருந்து புதன்கிழமை காலை 8.50 மணிக்கு புறப்பட்டு கோவை, திருப்பூர், ஈரோடு வழியாக புதன்கிழமை மாலை 4.07 மணிக்கு சேலம் வந்தடையும். பின்னர் இங்கிருந்து மாலை 4.10 மணிக்கு புறப்பட்டு பிலாஸ்பூர் ரெயில் நிலையத்திற்கு வியாழக்கிழமை இரவு 11.35 மணிக்கு சென்றடையும். இந்த தகவல் சேலம் ரெயில்வே கோட்ட அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.

Next Story