இயற்கை பேரிடரால் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு நிவாரண நிதி
இயற்கை பேரிடரால் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு நிவாரண நிதியினை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் வழங்கினார்.
விருதுநகர்,
அருப்புக்கோட்டை தாலுகா சுக்கிலநத்தம் கிராமத்தில் இடி மின்னல் தாக்கி உயிரிழந்த ராமலட்சுமி என்பவரது குடும்பத்தினருக்கு ரூ.8 லட்சமும், வத்திராயிருப்பு தாலுகா சுந்தரபாண்டியம் மீனாட்சிபுரம் கிராமத்தில் மண் சரிந்து விழுந்து உயிரிழந்த சித்ரா என்பவரின் குடும்பத்திற்கு ரூ. 4 லட்சமும் ஆக மொத்தம் ரூ.12 லட்சம் நிவாரண நிதியை கலெக்டர் மேகநாத ரெட்டி முன்னிலையில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் வழங்கினார். முன்னதாக விருதுநகர் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் ரோட்டரி சங்கங்கள் சார்பில் ரூ.20 லட்சம் மதிப்பிலான 13 ஆக்சிஜன்செறிவூட்டிகளையும், அமெரிக்கவாழ் தமிழ் மருத்துவ கழகம் சார்பில் ரூ.1¼ லட்சம் மதிப்பிலான கண் பூஞ்சை நோய்க்கான மருந்துகளையும் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் வழங்கினார். தொடர்ந்து சூலக்கரையில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற தடுப்பூசி முகாமினையும் அமைச்சர் பார்வையிட்டார். இதில் ஏ.ஆர்.ஆர். சீனிவாசன் எம்.எல்.ஏ., மாவட்ட வருவாய் அலுவலர் மங்கள ராமசுப்பிரமணியன், அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் சங்குமணி, அருப்புக்கோட்டை தாசில்தார் ரவிச்சந்திரன், ரோட்டரி சங்க நிர்வாகிகள் வடிவேல், கணேசன், இதயம் முத்து, அமெரிக்கவாழ் தமிழ் மருத்துவ சங்க நிர்வாகிகள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story