சேலம் மாநகராட்சியில் இன்று காய்ச்சல் கண்டறியும் முகாம் நடைபெறும் இடங்கள்
சேலம் மாநகராட்சியில் காய்ச்சல் கண்டறியும் சிறப்பு முகாம்கள் பல்வேறு இடங்களில் நடத்தப்பட்டு வருகிறது.
சேலம்:
சேலம் மாநகராட்சியில் காய்ச்சல் கண்டறியும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதைத்தொடர்ந்து இன்று (திங்கட்கிழமை) காலை 9 மணி முதல் 11 மணி வரை சக்தி நகர், அந்தோணிபுரம், டி.எம்.ரோடு, முல்லாக்காடு, எம்.ஜி ரோடு, சட்டக்கல்லூரி ரோடு, லட்சுமி சுந்தர் நகர், மிட்டா கண்ணன் தெரு, வெங்கடாஜலம் காலனி, வால்மீகி தெரு, ஜோதி மெயின் ரோடு, வித்யா நகர், புலிக்குத்தி தெரு, ராம்பிள்ளை தெரு, வடக்கு முனியப்பன் கோவில், அம்மாள் ஏரி ரோடு 2-வது குறுக்குத் தெரு ஆகிய பகுதிகளில் நடக்கிறது. அதே போன்று காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை கே.எஸ்.வி நகர், புது ரோடு, மாரியம்மன் கோவில் தெரு, சாமிநாதபுரம் மெயின் ரோடு, வன்னியர் நகர், ஆத்துக்காடு, ராம் நகர், கண்ணாரத் தெரு, தில்லை நகர், நாராயண நகர், அண்ணா நகர், அம்பாயிராம் சாவடி தெரு, ரங்கன் தெரு, திருவேங்கடம் தெரு, கலைஞர் நகர், எஸ்.ஆர்.வி நகர் ஆகிய பகுதிகளில் நடக்கிறது.
மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை ரெட்டிப்பட்டி, பிள்ளையார் நகர், முல்லை நகர், சின்ன எழுத்துக்காரத் தெரு, பிருந்தாவனம் 3-வது குறுக்குத் தெரு, கண்ணன் காடு, மார்க்கபந்து தெரு, மார்க்கெட் தெரு, அண்ணா நகர், குப்பை மேடு, புதுத்தெரு, கர்ணா நகர், நெய் மண்டி தெரு, மெசின் கிணறு தெரு, மகப்பூப் தெரு, எருமாபாளையம் மெயின் ரோடு ஆகிய பகுதிகளில் நடக்கிறது.சித்தா மருத்துவ முகாம் காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை அம்மாப்பேட்டை பாவடி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் என்றும், பொதுமக்கள் முகாமை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story