வனவிலங்குகளை வேட்டையாட முயன்ற 3 பேருக்கு அபராதம்


வனவிலங்குகளை வேட்டையாட முயன்ற 3 பேருக்கு அபராதம்
x
தினத்தந்தி 21 Jun 2021 1:46 AM IST (Updated: 21 Jun 2021 1:46 AM IST)
t-max-icont-min-icon

வனவிலங்குகளை வேட்டையாட முயன்ற 3 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

சிவகிரி:

சிவகிரிக்கு மேற்கே மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதியில் சிலர் வனவிலங்குகளை வேட்டையாடுவதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சிவகிரி வனச்சரகர் சுரேஷ் தலைமையில் வனத்துறையினர் தேவியாறு பீட் ஆற்றுப் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது தேவிபட்டணம் மணல் மேட்டு தெருவைச் சேர்ந்த பத்மநாதன் (வயது 45), ராஜபாளையம் தாலுகா சேத்தூர் மேட்டுப்பட்டி தெருவைச் சேர்ந்த சிங்கராஜ் (55), அழகுமலை (70) ஆகிய 3 பேரும் வேட்டை நாய்கள், அரிவாள் உள்ளிட்டவைகளுடன் வனவிலங்குகளை வேட்டையாடுவதற்காக நின்று கொண்டு இருந்தனர். அவர்களை பிடித்து வனச்சரக அலுவலகத்திற்கு கொண்டு வந்தனர். பின்னர் 3 பேருக்கும் தலா ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

Next Story