காரில் கடத்த முயன்ற 350 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்


காரில் கடத்த முயன்ற 350 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
x
தினத்தந்தி 21 Jun 2021 1:56 AM IST (Updated: 21 Jun 2021 1:56 AM IST)
t-max-icont-min-icon

காரில் கடத்த முயன்ற 350 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் சய்யப்பட்டன

புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்ட குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் முருகானந்தம் தலைமையில், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சந்திரன், ஏட்டுகள் பன்னீர்செல்வம், முருகேசன் ஆகியோர் புதுக்கோட்டை கட்டியா வயல் ஜங்ஷன் அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை மடக்கி சோதனையிட்டபோது அதில் ரேஷன் அரிசி கடத்தி வரப்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து அந்த வேனில் இருந்த 350 கிலோ ரேஷன் அரிசியையும், காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் ரேஷன் அரிசியை கள்ளச்சந்தையில் விற்பதற்காக கடத்த முயன்ற சிவகங்கை மாவட்டம் பள்ளத்தூரை சேர்ந்த அருண் பிரசாத்தை (வயது 30) போலீசார் கைது செய்தனர்.


Next Story