அதிகாரிக்கு கொலை மிரட்டல் விடுத்த தந்தை-மகன் கைது


அதிகாரிக்கு கொலை மிரட்டல் விடுத்த தந்தை-மகன் கைது
x
தினத்தந்தி 21 Jun 2021 2:02 AM IST (Updated: 21 Jun 2021 2:02 AM IST)
t-max-icont-min-icon

பேரூராட்சி அதிகாரிக்கு கொலை மிரட்டல் விடுத்த தந்தை-மகன் கைது

கறம்பக்குடி
 கறம்பக்குடியில் உங்கள் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் திட்டத்தின் கீழ், குடிநீர் பிரச்சினை குறித்து கொடுக்கப்பட்ட மனு தொடர்பாக, கறம்பக்குடி பேரூராட்சி 15-வது வார்டுக்கு உட்பட்ட மருத்துவர் காலனியில் பேரூராட்சி நிர்வாக அதிகாரி சுப்பிரமணியன் மற்றும் ஊழியர்கள் கள ஆய்வில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த பகுதியைச் சேர்ந்த கறம்பக்குடி சார்பதிவாளர் அலுவலக ஊழியர் முருகன் (வயது 50), அவரது மகன் சுதாகர் (26) ஆகியோர் சேர்ந்து பேரூராட்சி நிர்வாக அதிகாரி சுப்பிரமணியனை அவதூறாக பேசி பணி செய்ய விடாமல் தடுத்ததுடன், கொலை மிரட்டலும் விடுத்தனர். இதுகுறித்து நிர்வாக அதிகாரி சுப்பிரமணியன் கறம்பக்குடி போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் பிரபாகரன் வழக்குப்பதிவு செய்து சார்பதிவாளர் அலுவலக ஊழியர் முருகன், அவரது மகன் சுதாகர் ஆகியோரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Next Story