ஈரோடு மாவட்டத்தில் தடுப்பூசி போடும் பணி நிறுத்தம்


ஈரோடு மாவட்டத்தில் தடுப்பூசி போடும் பணி நிறுத்தம்
x
தினத்தந்தி 21 Jun 2021 2:30 AM IST (Updated: 21 Jun 2021 2:30 AM IST)
t-max-icont-min-icon

ஈரோடு மாவட்டத்தில் தடுப்பூசி போடும் பணி நிறுத்தப்பட்டுள்ளது.

ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் தற்காலிக மையங்களில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 3 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டு உள்ளன. அரசு மூலம் மாவட்டத்திற்கு அனுப்பப்படும் தடுப்பூசிகள் அனைத்து பகுதிகளுக்கும் மக்கள் தொகைக்கு ஏற்ப பிரித்து வழங்கப்பட்டு வருகிறது.
இதில் ஈரோடு மாநகர் மற்றும் புறநகர் பகுதியில் நேற்று முன்தினம் 66 மையங்களில் தடுப்பூசி போடப்பட்டது. இந்தநிலையில் மாவட்டத்தில் தடுப்பூசிகள் போதிய அளவில் இருப்பு இல்லாததால் நேற்று தற்காலிகமாக தடுப்பூசி போடும் பணி நிறுத்தி வைக்கப்பட்டது. இன்று (திங்கட்கிழமை) கூடுதலாக தடுப்பூசிகள் வர உள்ளதால் இன்று முதல் மீண்டும் வழக்கம்போல் தடுப்பூசி போடப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறையினர் தெரிவித்து உள்ளனர்.

Next Story