ரேஷன் கடைக்கு கூடுதலாக பூட்டு போட்ட பொதுமக்கள்


ரேஷன் கடைக்கு கூடுதலாக பூட்டு போட்ட பொதுமக்கள்
x
தினத்தந்தி 21 Jun 2021 2:33 AM IST (Updated: 21 Jun 2021 2:33 AM IST)
t-max-icont-min-icon

வேப்பந்தட்டை அருகே ரேஷன் கடைக்கு கூடுதலாக பூட்டு போட்டு பொதுமக்கள் பூட்டினர்.

வேப்பந்தட்டை:
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள அன்னமங்கலம் ஊராட்சி விசுவக்குடியில் பகுதி நேர ரேஷன் கடை உள்ளது. இந்த கடை வாரத்தில் வியாழன், சனி, ஞாயிறு ஆகிய கிழமைகளில் திறக்கப்பட்டு, பொதுமக்களுக்கு ரேஷன் பொருட்கள் வினியோகம் செய்யப்படுவது வழக்கம்.
இந்நிலையில் கடந்த வியாழன், சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்களும் கடை திறக்கப்படவில்லை. இதனால் கொரோனா நிவாரண நிதி ரூ.2 ஆயிரம் மற்றும் 14 வகையான மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு கிடைக்காததால், பொதுமக்கள் ஆத்திரமடைந்தனர். இதைத்தொடர்ந்து நேற்று ரேஷன் கடை கதவில் பூட்டு போடப்பட்டிருந்த இடத்தில் கூடுதலாக ஒரு பூட்டு போட்டு கடையை திறக்க முடியாத வகையில் பூட்டினர். இது பற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வட்ட வழங்கல் அதிகாரி பன்னீர்செல்வம், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, ரேஷன் கடை ஊழியர் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Next Story