ஊரடங்கு உத்தரவை மீறி ஜவுளிக்கடைகளில் வியாபாரம்
பெரம்பலூரில் ஊரடங்கு உத்தரவை மீறி ஜவுளிக்கடைகளில் வியாபாரம் நடைபெறுகிறது.
பெரம்பலூர்:
ஜவுளிக்கடைகளில் வியாபாரம்
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும், ஜவுளிக்கடைகளை திறக்க இதுவரை அனுமதி அளிக்கப்படவில்லை. இதனால் ஜவுளிக்கடைகள் மூடப்பட்டுள்ளன.
ஆனால் பெரம்பலூரில் உள்ள ஜவுளிக்கடைகள் மூடப்பட்டு காட்சியளித்தாலும், சில ஜவுளிக்கடைகளில் வியாபாரம் தொடர்ந்து நடைபெற்று கொண்டுதான் இருக்கிறது. பெரம்பலூர் கடைவீதி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஜவுளிக்கடைகளில் சிலவற்றில் அரசின் உத்தரவையும் மீறி பின்பக்க வாசல் வழியாக ஜவுளி எடுக்க பொதுமக்களை ஊழியர்கள் அனுமதிக்கின்றனர்.
வேண்டுகோள்
சில ஜவுளிக்கடைகளில் பாதியளவு ஷட்டர் கதவுகளை திறந்து வைத்து வியாபாரம் செய்கின்றனர். இதனால் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் பெரம்பலூருக்கு வந்து ஜவுளி எடுத்து செல்கின்றனர். இதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை.
பெரம்பலூரில் விதிமுறைகளை மீறும் ஜவுளிக்கடைகள் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story