எண்ணூர் துறைமுகத்தில் கப்பலில் எண்ணெய் கசிவு


எண்ணூர் துறைமுகத்தில் கப்பலில் எண்ணெய் கசிவு
x
தினத்தந்தி 21 Jun 2021 2:48 PM IST (Updated: 21 Jun 2021 2:48 PM IST)
t-max-icont-min-icon

சென்னையை அடுத்த எண்ணூரில் காமராஜர் துறைமுகம் செயல்பட்டு வருகிறது.

கப்பல்கள் மூலம் தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு தேவையான நிலக்கரி இறக்குமதி, இயற்கை எரிவாயு, இரும்பு தாது, எரிவாயு, கடல் சார் திரவ கையாளுதல், வாகனங்கள் கையாளுதல் உள்ளிட்டவற்றுக்கு தனித்தனியாக முனையங்கள் இங்கு உள்ளன. சராசரியாக 11 கப்பல்களுக்கு மேல் நிறுத்தப்பட்டு சரக்குகளை கையாளும் வசதி கொண்ட துறைமுகமாகும். இங்கு கொச்சி துறைமுகத்தில் இருந்து எண்ணெய் கப்பல் ஒன்று நேற்று வந்தது. இந்த கப்பலில் இருந்து எண்ணெய் இறக்கி கொண்டு இருக்கும்போது எதிர்பாராதவிதமாக குழாயில் இருந்து எண்ணெய் கடலில் சிறிதளவு கசிந்தது. இதனை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்த ஊழியர்கள், உடனடியாக கசிவை சரி செய்து கடலில் எண்ணெய் பரவுவதை முற்றிலும் தடுத்து விட்டனர்.ஏற்கனவே கடலில் எண்ணெய் கலந்து அவற்றை அப்புறப்படுத்தியதில் அனுபவம் இருந்ததால், சிறிய அளவில் எண்ணெய் கசிந்ததை கண்டறிந்து முற்றிலும் தடுக்கப்பட்டு உள்ளது. இதனால் பெரிய 
அளவில் எந்த சேதமும் ஏற்படவில்லை.

மேற்கண்ட தகவல்களை காமராஜர் துறைமுக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

Next Story