கம்பத்தில் பொதுமக்கள் சாலைமறியல்


கம்பத்தில் பொதுமக்கள் சாலைமறியல்
x
தினத்தந்தி 21 Jun 2021 5:44 PM IST (Updated: 21 Jun 2021 5:44 PM IST)
t-max-icont-min-icon

கம்பத்தில் பொதுமக்கள் சாலைமறியல் செய்தனர்.

கம்பம்:
கம்பத்தில் கம்பம்மெட்டுச்சாலையில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் உள்ளது. இந்த சங்கத்துக்குட்பட்ட ரேஷன் கடை எண் 4-ல் தமிழக அரசு வழங்கும் கொரோனா  நிவாரண தொகை ரூ.2 ஆயிரம் மட்டும் வழங்கப்பட்டது. 14 வகை மளிகை பொருட்கள் தொகுப்பு வழங்கப்படவில்லை. இதை கண்டித்து நேற்று பொதுமக்கள் கம்பம்மெட்டுச்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்த கம்பம் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சிலைமணி அங்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும் இதுகுறித்து அவர், வட்ட வழங்கல் அதிகாரியிடம் செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அனைத்து ரேஷன்கார்டுதாரர்களுக்கும் மளிகை பொருட்கள் தொகுப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து பொதுமக்கள் சாலைமறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Next Story