கொரோனாவை எதிர்கொள்ளும் மூச்சுதிறன் பயிற்சி
கொரோனாவை எதிர்கொள்ளும் மூச்சுதிறன் பயிற்சி அளிக்கப்பட்டது.
ராமநாதபுரம்,
சர்வதேச யோகா தினத்தையொட்டி மத்திய அரசின் நேரு யுவகேந்திரா, ராமநாதபுரம் மாவட்ட சிலம்பாட்ட இளைஞர் சங்கம் மற்றும் மாவட்ட மல்லர் கம்பம் கழகத்தின் சார்பில் யோகா தினம் கொண்டாடப்பட்டது. மாவட்ட நேரு யுவகேந்திரா அலுவலர் நோமன் அக்ரம் வரவேற்று பேச ினார். நிகழ்ச்சியில், மாவட்ட சிலம்பாட்ட இளைஞர் சங்க தலைவர் களஞ்சியம், வேதாத்திரி மகரிஷி மனவளைகலை மன்ற யோகா ஆசிரியை அமுதா, மாவட்ட மருத்துவ கல்லூரி மருத்துவமனை ஆடியோலஜிஸ்ட் கோகிலா ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில்கலந்து கொண்டவர்கள் அனைவரும் 20 யோகாசனமும், 10 முத்திரைகளும் செய்து காட்டினர். கொரோனா பாதிப்பால் ஆக்சிஜன் குறைவதை தடுக்கும் வகையில் உடலுக்கு இயற்கையாக ஆக்சிஜன் கிடைத்து மூச்சு திறன் மேம்படும் வகையில் மூச்சு பயிற்சியும் சுவாசத் திற்கான சிறப்பு லிங்க முத்திரை பயிற்சிகளும் அளிக்கப்பட்டது. முடிவில், சிலம்பொலி கிராமிய கலைக்குழுவின் தலைவர் லோகசுப்பிர மணியன் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story