மணல் அள்ளிய 2 பேர் கைது
மணல் அள்ளிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
தொண்டி,
திருவாடானை தாலுகா ஆதியூர்ஊராட்சி கருப்பூர் கிராமத்தில் அரசு அனுமதியின்றி மணல் அள்ளபடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுதர்சன் தலைமையில் போலீசார் அந்த பகுதியில் தீவிர சோதனை நடத்தினர். அப்போது மணல் ஏற்றி சென்று கொண்டிருந்த டிராக்டரை மடக்கிப் பிடித்த போலீசார் அவர்களிடம் நடத்திய விசாரணையில் கருப்பூர் கண்மாய் பகுதியில் அரசு அனுமதியின்றி மணல் அள்ளிச்சென்றது தெரியவந்துள்ளது. அதனைத்தொடர்ந்து டிராக்டரை பறிமுதல் செய்த போலீசார் இதுதொடர்பாக கருப்பூர் கிராமத்தை சேர்ந்த ரமேஷ் (வயது 48), சிறுவண்டல் கிராமத்தை சேர்ந்த காட்டுராஜா (40) ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர்.
Related Tags :
Next Story