தி.மு.க. நிர்வாகி மீது வழக்கு


தி.மு.க. நிர்வாகி மீது வழக்கு
x
தினத்தந்தி 21 Jun 2021 8:47 PM IST (Updated: 21 Jun 2021 8:47 PM IST)
t-max-icont-min-icon

தி.மு.க. நிர்வாகி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

முதுகுளத்தூர், 
முதுகுளத்தூர் அருகே உள்ள பாக்குவெட்டி கிராமத்தில் ரேஷன் கடை ஊழியராக பணியாற்றி வருபவர் கண்ணையா. இவர் ரேஷன் கடையில் பணி செய்து கொண்டிருந்தபோது கருங்குளம் கிராமத்தை சேர்ந்த தி.மு.க. இலக்கிய அணிச்செயலாளர் அய்யனார், ரேஷன் கடையில் கொடுக்கும் நிவாரண பொருள் மற்றும் பணம் என்னுடைய முன்னிலையில் கொடுக்க வேண்டும் என கூறியதில் 2 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதில் கண்ணையாவை கட்டையால் அய்யனார் தாக்கினார். இதில் காயமடைந்த அவர் கமுதி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின் பேரில் அய்யனார் மீது பேரையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story