தொடர் மணல் திருட்டு
நயினார்கோவில் அருகே தொடர் மணல் திருட்டு நடந்து வருகிறது.
நயினார்கோவில்,
பரமக்குடி தாலுகா நயினார்கோவில் யூனியன் சிரகிகோட்டை கிராமத்தில் உள்ள வைகை ஆற்றுப்படுகையில் தொடர் மணல் திருட்டு நடைபெறுகிறது.. இதுகுறித்து சிரகிகோட்டை ஊராட்சி தலைவர் ராமு கூறியதாவது:- சிரகி கோட்டையில் இருந்து மஞ்சக்கொல்லை செல்லும் வழியில் உள்ள வைகை ஆற்று கரையில் தினமும் இரவில் மணல் கொள்ளை நடைபெற்று வருகிறது. இதனால் நீர்வளம் பாதிக்கப்பட்டு விவசாயிகள் பெரிதும் அவதிக்கு உள்ளாகின்றனர். சிரகிகோட்டை கிராமத்தில் நெல், மிளகாய், பருத்தி, கடலை சாகுபடி செய்து வருகிறோம். நீர்வளம் மிக்க பசுமையான இந்த கிராமத்தில் உள்ள வைகை ஆற்று கரையில் ஜே.சி.பி. எந்திரம் மூலம் தினமும் சுமார் 20 லாரிகளில் மணல் திருட்டு நடை பெற்று வருகிறது. இதுதொடர்பாக சத்திரக்குடி போலீஸ் நிலையம் மற்றும் பரமக்குடி தாசில்தாரிடம் தொடர்ந்து புகார் அளித்தும் எந்த பயனும் அளிக்க வில்லை. மாவட்ட நிர்வாகம் இதனை கருத்தில் கொண்டு மணல் திருட்டை தடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story