கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தை பஞ்சாயத்து தலைவர் தலைமையில் முற்றுகையிட்டு போராட்டம்
கோவில்பட்டி அருகேயுள்ள கொடுக்காம்பாறையில் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நேற்று உதவி கலெக்டர் அலுவலகத்தை பஞ்சாயத்து தலைவர் தலைமையில் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
கோவில்பட்டி:
கோவில்பட்டி அருகேயுள்ள கொடுக்காம்பாறையில் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நேற்று உதவி கலெக்டர் அலுவலகத்தை பஞ்சாயத்து தலைவர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்.
முற்றுகை போராட்டம்
கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியம் கொடுக்காம்பாறை பஞ்சாயத்து தலைவர் ரா.ரத்தின வேல் தலைமையில் வார்டு உறுப்பினர்கள் ஆர்.பூமாரி, எஸ்.கருப்பசாமி, தி.மு.க. கிளை செயலாளர் எஸ்.முத்து பாண்டி, இலுப்பை யூரணி ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் உத்தண்டு ராமன் ஆகியோர் நேற்று கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர்.
கொடுக்கம்பாறை பஞ்சாயத்தில் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்க கோரி கோஷங்கள் எழுப்பியவாறு உதவி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
பின்னர் உதவி கலெக்டரின் நேர்முக உதவியாளர் முருகானந்தத்திடம் கோரிக்கை மனு வழங்கினர்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியம், கொடுக்காம்பாறை ஊராட்சி மன்றத்துக்கு உட்பட்ட பகுதிகளுக்கு தனி நபர்களுக்கு குடிநீர் வழங்கும் மத்திய அரசின் ஜல் ஜீவன் மிசன் திட்டத்தில் விஜயாபுரி மற்றும் கொடுக்காம் பாறை கிராமங்களுக்கு 578 தனி நபர்களுக்கு குடிநீர் இணைப்பு வழங்க அனுமதிக்கப் பட்டுள்ளது.
இந்த பணிகளை ஒப்பந்தம் எடுத்துள்ள ஒப்பந்ததாரர், விஜயாபுரி கிராமத்தில் பணிகள் முழுமை யாக நிறை வேற்றாமல் அதற்குரிய தொகையை எடுக்க கையெழுத்து போடும்படி கேட்டார். ஆனால், நான் முழுமை யாக பணி நிறைவு செய்ய வேண்டும். அதனை சம்பந்தப் பட்ட பொறியாளர்கள் ஆய்வு செய்ய வேண்டும். கொடுக்காம் பாறை ஊராட்சி மக்களுக்கு தனி நபர் குடிநீர் திட்டத்தை மத்திய மாநில சட்டப்படி ஒவ்வொரு தனி நபருக்கும் குடிநீர் வழங்கிய பின்பு தான் பணம் வழங்கு வதற்கு பரிந்துரை செய்வேன் என்று தெரிவித்தேன்.
அதனால் எங்கள் ஊராட்சியில் தனி நபர் குடிநீர் திட்டத்தை செயல் படுத்தாமல் பணியை நிறுத்தி விட்டார். இது குறித்து நான் கடந்த பிப்ரவர் 9-ந் தேதி மாவட்ட கலெக்டருக்கு புகார் அளித்துள் ளேன். அதன் பின்னரும் பணிகள் தொடங்க வில்லை.
உண்ணாவிரத போராட்டம்
எனவே, அரசு அனுமதித் துள்ளபடி மத்திய அரசின் ஜல்ஜீவன் மிசன் திட்டத்தின்படி அனுமதித் துள்ள தனி நபர்களின் வீடுகளுக்கு உடனடியாக குடிநீர் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், இந்த கோரிக்கை வலியுறுத்தி கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு ஜூன் 28-ந்தேதி ஒரு நாள் அடையாள உண்ணா விரதப் போராட்டம் நடத்த அனுமதி வழங்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story