தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் ஆர்ப்பாட்டம்

தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 21 Jun 2021 9:44 PM IST (Updated: 21 Jun 2021 9:44 PM IST)
t-max-icont-min-icon

100 நாள் வேலை திட்டத்தில் சாதிவாரி கணக்கெடுப்பை கைவிடக்கோரி நாகையில், தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாகப்பட்டினம்:
100 நாள் வேலை திட்டத்தில் சாதிவாரி கணக்கெடுப்பை கைவிடக்கோரி நாகையில், தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
 
ஆர்ப்பாட்டம்

நாகை அவுரி திடலில் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் முருகையன் தலைமை தாங்கினார். தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட செயலாளர் சுபாஷ் சந்திரபோஸ் முன்னிலை வகித்தார்.
அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாநில பொதுச்செயலாளர் அமிர்தலிங்கம் கலந்து கொண்டு பேசினார்.

சாதிவாரி கணக்கெடுப்பு

100 நாள் வேலைத் திட்டத்தில் தொழிலாளர்களை சாதிவாரி கணக்கெடுப்பதை மத்திய அரசு கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பபட்டன.  இதில் பொருளாளர் வெங்கடேசன், மாநில பொதுக்குழு உறுப்பினர் மீரான் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story