கொரோனா தடுப்பூசி முகாம்


கொரோனா தடுப்பூசி முகாம்
x
தினத்தந்தி 21 Jun 2021 10:52 PM IST (Updated: 21 Jun 2021 10:52 PM IST)
t-max-icont-min-icon

கொரோனா தடுப்பூசி முகாம்

பொன்னமராவதி, ஜூன்.22-
பொன்னமராவதி லயன்ஸ் பள்ளியில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. முகாமிற்கு லயன்ஸ் சங்கத் தலைவர் சண்முகம் தலைமை தாங்கினார். சங்க நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். முகாமை வட்டார மருத்துவ அலுவலர் அருள்மணி நாகராஜன் பொதுமக்களுக்கு தடுப்பூசியை செலுத்தி தொடங்கி வைத்தார். இதில் மருத்துவர் அருண் மற்றும் காரையூர் வட்டார சுகாதார மருத்துவக்குழுவினர் பங்கேற்று 195 பர்களுக்கு  தடுப்பூசியை செலுத்தினர். இதில் லயன்ஸ் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Next Story