சாலை வரி செலுத்தாத கேரள ஆம்னி பஸ் பறிமுதல்
சாலை வரி செலுத்தாத கேரள ஆம்னி பஸ் பறிமுதல் செய்யப்பட்டது.
நல்லம்பள்ளி:
நல்லம்பள்ளி அருகே உள்ள புறவடை பிரிவு ரோட்டில் தர்மபுரி வட்டார போக்குவரத்து அலுவலர் தாமோதரன் தலைமையிலான மோட்டார் வாகன ஆய்வாளர்கள் வாகன தணிக்கையில் நேற்று ஈடுபட்டிருந்தனர். அப்போது கேரள மாநிலத்தை சேர்ந்த ஆம்னி பஸ்சை நிறுத்தி அலுவலர்கள் ஆவணங்களை சரி பார்த்தனர். அப்போது அந்த பஸ்சுக்கு, சாலை வரி செலுத்தாமல் தமிழகத்தில் சென்று வந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து பஸ்சை பறிமுதல் செய்தனர். சாலை வரி செலுத்தாமல் இயக்கப்பட்டதால் ரூ.2,500 அபராதம் மற்றும் நிலுவையில் உள்ள சாலை வரி ரூ.39 ஆயிரத்து 200 என மொத்தம் ரூ.41 ஆயிரத்து 700-ஐ அதிகாரிகள் வசூலித்தனர்.
Related Tags :
Next Story