குன்னூர் அரசு லாலி ஆஸ்பத்திரியில் ஆக்சிஜன் உற்பத்தி எந்திரம் பொருத்தம்


குன்னூர் அரசு லாலி ஆஸ்பத்திரியில் ஆக்சிஜன் உற்பத்தி எந்திரம் பொருத்தம்
x
தினத்தந்தி 21 Jun 2021 11:57 PM IST (Updated: 21 Jun 2021 11:58 PM IST)
t-max-icont-min-icon

குன்னூர் அரசு லாலி ஆஸ்பத்திரியில் ஆக்சிஜன் உற்பத்தி எந்திரம் பொருத்தப்பட்டது.

குன்னூர்,

குன்னூர் அரசு லாலி ஆஸ்பத்திரியில் கொரோனா தொற்று ஏற்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இங்கு கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் தேவை அதிகரிக்கும்போது, மேல் சிகிச்சைக்காக ஊட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

 இந்த நிலையில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததால் ஆக்சிஜன் தேவையும் அதிகரித்தது. இதனைத்தொடர்ந்து நோயாளிகளின் நலனை கருத்தில் கொண்டு தனியார் அமைப்பை சேர்ந்தவர் ரூ.80 லட்சத்தில் ஆக்சிஜன் ஜெனரேட்டரை(ஆக்சிஜன் உற்பத்தி  எந்திரம்) அரசு ஆஸ்பத்திரிக்கு வழங்க முன்வந்தார். 

இதையடுத்து 3 டன் எடை கொண்ட 500 லிட்டர் கொள்ளளவு உடைய ஆக்சிஜன் ஜெனரேட்டர் அகமதாபாத்தில் இருந்து கொண்டு வந்து லாலி அரசு ஆஸ்பத்திரியில் பொருத்தப்பட்டது.

இதுகுறித்து டாக்டர்கள் கூறுகையில், குன்னூர் லாலி அரசு ஆஸ்பத்திரியில் ஆக்சிஜன் ஜெனரேட்டர் பொருத்தப்பட்டுள்ளதால், இனிவரும் காலத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பு இல்லை என்றனர். 

Next Story