விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 22 Jun 2021 12:14 AM IST (Updated: 22 Jun 2021 12:14 AM IST)
t-max-icont-min-icon

சிவகங்கை கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

சிவகங்கை,

அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி (தலித் ஒடுக்குமுறை விடுதலை முன்னணி) ஆகியவை சார்பில் சிவகங்கை கலெக்டர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.. ஆர்ப்பாட்டத்தில் மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் கூலி செலவினத்தை சாதி வாரியாக எஸ்.சி, எஸ்.டி, இதரர்  என்று பிரித்து கொடுக்க வேண்டும் என்று கூறுவதை கைவிட வேண்டும். இத்திட்டத்தில் இணைந்துள்ள குடும்பங்கள் அனைத்திற்கும் ஆண்டிற்கு 200 நாள் வேலை, குறைந்த பட்ச நாள் ஊதியம் ரூ.600  வழங்கப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
ஆா்ப்பாட்டத்திற்கு விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் மணியம்மா, தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட தலைவர் கந்தசாமி ஆகியோர் தலைமை தாங்கினர்.இதில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட செயலாளர் பொன்னுச்சாமி, சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் வீரையா, சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் உமாநாத், உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story