கோவை மாநகர தலைமையிடத்து போலீஸ் துணை கமிஷனர் பொறுப்பேற்பு
கோவை மாநகர தலைமையிடத்து போலீஸ் துணை கமிஷனர் பொறுப்பேற்பு
கோவை
கோவை மாநகர தலைமையிடத்து போலீஸ் துணை கமிஷனராக பணியாற்றியவர் ஜெயச்சந்திரன். இவர் கோவை மாநகர சட்டம்- ஒழுங்கு துணை கமிஷனராக மாற்றப்பட்டார்.
அவருக்கு பதிலாக செல்வராஜ் நியமிக்கப்பட்டார். அவர் பொறுப்பேற்றுக் கொண்டார். பின்னர் அவர் போலீஸ் கமிஷனர் தீபக் தாமோரை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
கடந்த 2003-ம் ஆண்டு போலீஸ் துணை சூப்பிரண்டாக பணியை தொடங்கிய செல்வராஜ், பதவி உயர்வு பெற்று மதுரையில் துணை கமிஷனராகவும், கடந்த 2017-ம் ஆண்டு புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாகவும் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story