காங்கேயத்தில் கொரோனா தடுப்பூசி மையங்களில் தாசில்தார் ஆய்வு
காங்கேயத்தில் கொரோனா தடுப்பூசி மையங்களில் தாசில்தார் ஆய்வு
காங்கேயம்
காங்கேயம் பகுதியில் கொரோனா 2-வது அலையை கட்டுப்படுத்தும் விதமாக பல்வேறு இடங்களில் தடுப்பூசி முகாம் அமைக்கப்பட்டு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. அந்த வகையில் காங்கேயம் நகரம் மற்றும் ஒன்றிய பகுதிகளான காங்கேயம் கார்மல் மேல்நிலைப்பள்ளி முகாமில் 170 பேருக்கும், கீரனூரில் அரசு நடுநிலைப்பள்ளி முகாமில் 150 பேருக்கும், பெரிய இளையம்புதூர் அரசு நடுநிலைப்பள்ளி முகாமில் 100 பேருக்கும், நத்தக்காட்டுவலசு கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளி முகாமில் 100 பேருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
இந்த நிலையில் காங்கேயம்-சத்யா நகர் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் கார்மல் மகளிர் மேல்நிலைப்பள்ளியிலும், சாவடிப்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் கீரனூர் ஊராட்சி ஆகிய இடங்களில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி போடும் முகாமை காங்கேயம் தாசில்தார் சிவகாமி ஆய்வு மேற்கொண்டார்.
Related Tags :
Next Story