முத்தூர் அருகே செல்போன் மூலம் சகோதரிக்கு தகவல் தெரிவித்து விட்டு பொக்லைன் எந்திர உரிமையாளர் விஷ மாத்திரை தின்று தற்கொலை செய்து கொண்டார்.

முத்தூர் அருகே செல்போன் மூலம் சகோதரிக்கு தகவல் தெரிவித்து விட்டு பொக்லைன் எந்திர உரிமையாளர் விஷ மாத்திரை தின்று தற்கொலை செய்து கொண்டார்.
x
தினத்தந்தி 22 Jun 2021 12:37 AM IST (Updated: 22 Jun 2021 12:37 AM IST)
t-max-icont-min-icon

முத்தூர் அருகே செல்போன் மூலம் சகோதரிக்கு தகவல் தெரிவித்து விட்டு பொக்லைன் எந்திர உரிமையாளர் விஷ மாத்திரை தின்று தற்கொலை செய்து கொண்டார்.

முத்தூர்,
முத்தூர் அருகே செல்போன் மூலம் சகோதரிக்கு தகவல் தெரிவித்து விட்டு பொக்லைன் எந்திர உரிமையாளர் விஷ மாத்திரை தின்று தற்கொலை செய்து கொண்டார். 
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
பொக்லைன் உரிமையாளர்
முத்தூர் அருகே உள்ள மலையத்தாபாளையம், திருவள்ளுவர் வீதியை சேர்ந்த சீனிராஜ் என்பவரது மகன் பிரகாஷ் (வயது 29). பொக்லைன் எந்திர உரிமையாளர். இவரது மனைவி கிருஷ்ணவேணி (23). இந்த தம்பதிகளுக்கு திகிஷ் (7), சிவபிரசாத் (5) என்ற 2 மகன்கள் உள்ளனர். 
இந்த நிலையில் பிரகாஷ் நேற்று முன்தினம் காலை 11 மணிக்கு மலையத்தாபாளையம், கருப்பராயன் கோவில் அருகே சென்று தனது சகோதரிக்கு செல்போன் மூலம் தான் விஷ மாத்திரையை தின்று விட்டதாக தகவல் தெரிவித்தார்.
 இதனை தொடர்ந்து பிரகாஷின் சகோதரி, அவரின் கணவர் மற்றும் பிரகாஷின் மனைவி கிருஷ்ணவேணி ஆகியோர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்த்தனர். 
அப்போது அங்கு பிரகாஷ் மயங்கிய நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதனை தொடர்ந்து கிருஷ்ணவேணியின் குடும்பத்தினர் உடனடியாக பிரகாஷை மீட்டு முத்தூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர். 
சாவு
அங்கு முதலுதவி சிகிச்சை பெற்ற பிரகாஷ் மேல் சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு பிரகாஷை பரிசோதித்த ஈரோடு அரசு மருத்துவமனை டாக்டர்கள் வரும் வழியிலேயே அவர் இறந்து விட்டதாக தகவல் தெரிவித்தனர். இதுபற்றி வெள்ளகோவில் போலீசில் கிருஷ்ணவேணி அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
 இதன்படி போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் பொக்லைன் எந்திர உரிமையாளர் பிரகாசுக்கு பொக்லைன் எந்திரம் வாங்கியதில் அதிக அளவில் கடன் ஏற்பட்டு இருந்ததாகவும், அதனால் ஏற்பட்ட மன உளைச்சலில் பிரகாஷ் வாழ்க்கையில் விரக்தி அடைந்து விஷ மாத்திரை தின்று தற்கொலை செய்து கொண்டார் என்பதும் என தெரிய வந்தது.  

Related Tags :
Next Story