அரசு நிர்ணயம் செய்ததை விட தனியார் பள்ளிகளில் கூடுதல் கட்டணம் வசூல்
அரசு நிர்ணயம் செய்ததை விட தனியார் பள்ளிகளில் கூடுதல் கட்டணம் வசூல்
பொள்ளாச்சி
மாணவர்களின் கல்வி உரிமைக்கான கூட்டமைப்பினர் நேற்று பள்ளி கல்வித்துறை அமைச்சருக்கு, பொள்ளாச்சி சப்-கலெக்டர் (பொறுப்பு) மகாராஜ் வழியாக ஒரு மனு அனுப்பினர். அதில் கூறியிருப்பதாவது:-
தனியார் பள்ளிகளில் கல்வி கட்டண முறைகேடு நடப்பதை தடுக்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் கட்டண நிர்ணய குழு அமைக்கப் பட்டு, கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டது.
2019-20-ம் கல்வி ஆண்டிற்கு குறைந்தபட்சம் எல்.கே.ஜி.க்கு ரூ.11,615-ம், அதிகபட்சமாக பிளஸ்-2-க்கு ரூ.25,850 வரையும் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டது.
இந்த கட்டண பட்டியல் பள்ளிகளில் வைக்கப்படுவது இல்லை. கொரோனா காலத்தில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட 75 சதவீத கட்டணத்தை 2 தவணையாக கட்டலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
ஆனால் இதை யாரும் கடைபிடிப்பது இல்லை. எனவே அரசு நிர்ணயம் செய்த கட்டணத்தை மட்டும் மாணவர்களிடம் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story