காங்கேயத்தில்மதுபாட்டில்கள் கடத்திய 2 பேர் கைது
காங்கேயத்தில்மதுபாட்டில்கள் கடத்திய 2 பேர் கைது
காங்கேயம்:
காங்கேயம் அருகே கரூர் சாலையில் உள்ள முத்தூர் பிரிவில் காங்கேயம் போலீசார் நேற்று இரவு 8 மணியளவில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் வந்த மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது அந்த மோட்டார் சைக்கிளில் 43 மதுபான பாட்டில்களை கடத்தி சென்றது தெரிய வந்தது.
இதையடுத்து அந்த மோட்டார் சைக்கிளில் மதுபான பாட்டில்களை எடுத்துச் சென்ற ஈரோடு, அந்தியூர்-பச்சாபாளையம் பகுதியைச் சேர்ந்த சரவணக்குமார் (வயது 31), சேலம், எடப்பாடி பகுதியைச் சேர்ந்த சந்தோஷ்குமார் (22) ஆகிய 2 பேரையும் காங்கேயம் போலீசார் கைது செய்தனர். அவர்கள் வைத்திருந்த 43 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story