வேலூரில் திருமணம் ஆகாமல் குழந்தை பெற்ற இளம்பெண். போக்சோ சட்டத்தில் வாலிபர் மீது வழக்கு

வேலூரில் திருமணம் ஆகாமல் குழந்தை பெற்ற இளம்பெண்
வேலூரில் திருமணம் ஆகாமல் குழந்தை பெற்ற இளம்பெண். போக்சோ சட்டத்தில் வாலிபர் மீது வழக்கு
Published on

வேலூர்

வேலூர் கஸ்பா அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கடந்த 18-ந் தேதி இளம்பெண் ஒருவர் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு உடல்நலம் சரியில்லாமல் இருந்ததால் வேலூர் பென்ட்லேன்ட் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற பரிந்துரை செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து குழந்தையை பென்ட்லேன்ட் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

அப்போது குழந்தையின் தாய்க்கு17 வயது என்பதும், அவருக்கு திருமணம் நடைபெறவில்லை என்பதும் டாக்டருக்கு தெரியவந்தது. இதையடுத்து மருத்துவமனை சார்பில் வேலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில் அந்தப் பெண்ணை வாலிபர் ஒருவர் காதலித்து ஏமாற்றி உல்லாசமாக இருந்துள்ளார். இதனால் அந்த பெண் கர்ப்பமாகி குழந்தை பெற்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கஸ்பாவை சேர்ந்த இர்பான் என்ற வாலிபர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com