ஆம்பூர் அருகேதண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து 1 வயது குழந்தை பலி

ஆம்பூர் அருகேதண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து 1 வயது குழந்தை பலி
x
தினத்தந்தி 21 Jun 2021 7:13 PM GMT (Updated: 2021-06-22T00:43:57+05:30)

ஆம்பூர் அருகேதண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து 1 வயது குழந்தை பலி

ஆம்பூர்

ஆம்பூரை அடுத்த பனங்காட்டூர் பகுதியை சேர்ந்தவர் புஷ்பராஜ், ஆட்டோ டிரைவர். இவரது மனைவி புனிதவல்லி. இவர்களுக்கு 1 வயதில் வெற்றிவேல் என்ற ஆண் குழந்தை உள்ளது. 

இந்தநிலையில் நேற்று மாலை 5 மணி அளவில் வீட்டின் அருகே உள்ள தண்ணீர் தொட்டியில் குழந்தை தவறி விழுந்தது. உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு எடுத்து செல்லும் வழியில் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. 

இதுகுறித்து உமராபாத் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 
குழந்தை தண்ணீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story