சாலை தடுப்பு கம்பிகளை திருடி விற்ற 3 பேர் கைது
ஆலங்குளத்தில் சாலை தடுப்பு கம்பிகளை திருடி விற்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஆலங்குளம்:
ஆலங்குளம் அண்ணாநகரை சேர்ந்தவர் ஜெயராஜ் (வயது 50). சாலைப் பணியாளராக உள்ள இவருக்கு குடிப்பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக சாலை தடுப்புகளுக்கு இடையே உள்ள கம்பிகளை ஒவ்வொன்றாக திருடி பழைய இரும்பு கடையில் கொடுத்து அதில் கிடைக்கும் பணத்தை வைத்து மது அருந்தி வந்துள்ளார். இரு நாட்களுக்கு முன்பு சில கம்பிகளை மொத்தமாக சீனிவாசன் என்பவருக்கு சொந்தமான ஆட்டோவில் ஏற்றி முருகன் என்பவரது பழைய இரும்பு கடையில் விற்பனை செய்துள்ளார்.
இதுகுறித்து தகவல் அறிந்த நெல்லை நெடுஞ்சாலைத்துறை திட்ட மேலாளர் கோஸ்பின் அளித்த புகாரின் பேரில் ஆலங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சாலைப்பணியாளர் ஜெயராஜ், ஆட்டோக்காரர் சீனிவாசன், இரும்பு கடைக்காரர் முருகன் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். பின்னர் போலீஸ் நிலைய ஜாமீனில் விடுவித்தனர்.
Related Tags :
Next Story