சமூக இடைவெளியின்றி குவியும் மக்கள்


சமூக இடைவெளியின்றி குவியும் மக்கள்
x
தினத்தந்தி 22 Jun 2021 1:29 AM IST (Updated: 22 Jun 2021 1:29 AM IST)
t-max-icont-min-icon

வத்திராயிருப்பு பகுதியில் உள்ள ரேஷன் கடையில் சமூக இடைவெளியின்றி மக்கள் குவிவதால் நோய் பரவும் அபாய நிலை நிலவுகிறது.

வத்திராயிருப்பு,
வத்திராயிருப்பு பகுதியில் உள்ள ரேஷன் கடையில் சமூக இடைவெளியின்றி மக்கள் குவிவதால் நோய் பரவும் அபாய நிலை நிலவுகிறது. 
நிவாரண தொகுப்பு 
வத்திராயிருப்பு பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் தமிழக அரசு வழங்கும் 14 வகையான நிவாரண பொருட்களும், நிவாரண தொகையும் வழங்கப்பட்டு வருகிறது. 
தேவையின்றி கூட்டம் கூடுவதை தவிர்க்கும் வகையில் டோக்கன் வழங்கப்பட்டு உள்ளது. இருப்பினும் வத்திராயிருப்பு பகுதியில் உள்ள மக்கள் இந்த பொருட்களை வாங்க கூட்டம், கூட்டமாக செல்கின்றனர். 
சமூக இடைவெளி 
அவ்வாறு செல்பவர்கள் சமூக இடைவெளியை மறந்து நிற்கின்றனர். இதனால் கொரோனா பரவி விடுமோ என சமூக ஆர்வலர்கள் அஞ்சுகின்றனர். இவ்வாறு கடைக்கு வருபவர்களில் ஒரு சிலர் முக கவசம் அணியாமல் வருகின்றனர். 
எனவே நோய் தொற்றின் தன்மையை அறிந்து பொது மக்கள்  சமூக இடைவெளியை பின்பற்றி முக கவசம் அணிந்து வர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல சமூக இடைவெளியை பி்ன்பற்றாத கடைகளில் பொருட்கள் வினியோகம் செய்யப்படுவதை அதிகாரிகள் தடை செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர். 
அதேபோல நிவாரணத்தொகை வழங்கும் போது அரிசி உள்ளிட்ட மற்ற பொருட்களை வினியோகம் செய்யக்கூடாது. இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

Next Story