பட்டாசு விபத்தில் தொழிலாளி பலி
சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.
சிவகாசி,
சிவகாசி அருகே உள்ள மாரனேரி போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட மேலபழையாபுரத்தில் சிவகாசியை சேர்ந்த குமரேசன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை உள்ளது. இந்த ஆலையில் வழக்கம்போல் நேற்று பட்டாசு உற்பத்தி நடைபெற்றது. அப்போது மணிமருந்து செலுத்தும் அறையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் அந்த அறையில் இருந்த ஆலங்குளம் சிவலிங்காபுரத்தை சேர்ந்த தொழிலாளி குருசாமி (வயது 45) என்பவருக்கு பலத்த தீக்காயம் ஏற்பட்டது. உடனே அங்கிருந்த சகதொழிலாளர்கள் அவரை மீட்டு சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்து சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். பட்டாசு ஆலை விபத்து குறித்து மாரனேரி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story