திருச்சி மலைக்கோட்டையில் யோகாசன நிகழ்ச்சி


திருச்சி
x
திருச்சி
தினத்தந்தி 21 Jun 2021 8:24 PM GMT (Updated: 2021-06-22T01:54:09+05:30)

திருச்சி மலைக்கோட்டையில் யோகாசன நிகழ்ச்சி நடைபெற்றது.

மலைக்கோட்டை
7-வது சர்வதேச யோகா தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. இந்த நாளில் பல்வேறு யோகாசன நிகழ்ச்சிகள் நடைபெறும். ஆனால், தற்போது கொரோனா ஊரடங்கு அமலில் உள்ளதால் பொது இடங்களில் யோகாசன நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டு ஆன்லைன் மூலமாக பல இடங்களில் நடைபெற்று வருகிறது. இதற்கிடையே இந்திய தொல்லியல் ஆராய்ச்சி துறையின் சார்பில் நாடு முழுவதும் 75 இடங்களில் உலக யோகாசன நாள் கடைபிடிக்கப்பட்டு வரும் நிலையில், தமிழகத்தில் திருச்சி உள்ளிட்ட 4 இடங்களில் யோகாசன நிகழ்ச்சி நடைபெற்றது. அந்தவகையில் திருச்சி மலைக்கோட்டை பல்லவ குகை வாசலில் சர்வதேச யோகா தின நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. தொல்லியல் துறை கண்காணிப்பாளர் அருண்ராஜ் தலைமையில் யோகா ஆசிரியர் ராஜசேகரன் வழிகாட்டுதலில் இந்திய தொல்லியல் ஆராய்ச்சி துறை ஊழியர்கள் மற்றும் குடும்பத்தினர், பொதுமக்கள் சமூக இடைவெளியுடன் பங்கேற்று பல்வேறு யோகா ஆசனங்களை செய்தனர்.

Next Story