குளத்தில் செத்து மிதக்கும் மீன்கள்


குளத்தில் செத்து மிதக்கும் மீன்கள்
x
தினத்தந்தி 22 Jun 2021 2:29 AM IST (Updated: 22 Jun 2021 2:29 AM IST)
t-max-icont-min-icon

குளத்தில் செத்து மிதக்கும் மீன்களை உடனடியாக அப்புறப்படுத்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

செந்துறை:
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள ராயம்புரம் கிராமத்தில் இருந்து ஆனந்தவாடி செல்லும் சாலையில் அமைந்துள்ளது அரியாகுளம். இந்த குளம் 60 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. இதன் மூலம் 100 ஏக்கர் பரப்பளவு நிலத்தில் சாகுபடி செய்யப்படுகிறது. இந்த குளத்தில் ஏராளமான மீன்கள் செத்து மிதக்கின்றன. இதனால் துர்நாற்றம் வீசுவதாகவும், குளத்து நீரை பயன்படுத்த முடியவில்லை என்றும் பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். எனவே குளத்தில் செத்து மிதக்கும் மீன்களை உடனடியாக அப்புறப்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story