மரம் வெட்டியபோது தவறி விழுந்த தொழிலாளி சாவு
மரம் வெட்டியபோது தவறி விழுந்த தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம் அம்மாபாளையம் தேவேந்திர குல தெருவை சேர்ந்தவர் காமராஜ் (வயது 60). மரம் வெட்டும் தொழிலாளியான இவர் சம்பவத்தன்று அதே பகுதியை சேர்ந்த குணசேகரன் என்பவரது வயலில் உள்ள அரசமரத்தை வெட்டுவதற்காக சென்றார். அப்போது காமராஜ் மரத்தின் மேலே ஏறிச்சென்று, மரத்தை வெட்டியபோது தவறி கீழே விழுந்ததில் படுகாயமடைந்தார். இதனை கண்ட அக்கம், பக்கத்தினர் காமராஜை மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த காமராஜ் நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது தொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story