உள்ளூர் மக்களுக்கு ஆதார் அட்டை மூலம் இ பாஸ் வழங்க வேண்டும்
உள்ளூர் மக்களுக்கு ஆதார் அட்டை மூலம் இ-பாஸ் வழங்க வேண்டும் என்று சுற்றுலா வாகன ஓட்டுனர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஊட்டி,
ஊட்டி சுற்றுலா வாகன ஓட்டுனர் நலச்சங்கம் சார்பில் நேற்று ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் இன்னசென்ட் திவ்யாவிடம் கோரிக்கை மனு ஒன்று அளிக்கப்பட்டது. அந்த மனுவில் கூறி இருப்பதாவது:-
கொரோனா பரவல் எதிரொலியாக நீலகிரிக்கு சுற்றுலா பயணிகள் வர தடை தொடர்கிறது. இதனால் சுற்றுலா வாகன ஓட்டுனர்கள் வாழ்வாதாரம் இழந்து பாதிக்கப்பட்டு உள்ளனர். இதற்கிடையில் சவாரி கிடைக்கும் நிலையில், இ-பாஸ் அனுமதி இருந்தால் மட்டுமே பயணிக்க முடியும் என்பதால் சுற்றுலா வாகன ஓட்டுனர்கள் தவித்து கொண்டு இருக்கிறோம்.
எனவே, உள்ளூர் மக்களுக்கு ஆதார் அடையாள அட்டை போன்ற ஆவணங்கள் அடிப்படையில் உடனே இ-பாஸ் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வாழ்வாதாரம் பாதித்த எங்களையும், குடும்பங்களையும் காப்பாற்ற நிவாரண பொருட்கள் மற்றும் நிதி உதவி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.
Related Tags :
Next Story