திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவில் அர்ச்சகர்களுக்கு நிதியுதவி
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம்-சதுரங்கப்பட்டினம் சாலையில் பழமைவாய்ந்த வேதகிரீஸ்வரர் கோவில் உள்ளது.
இந்த கோவிலில் உள்ள அர்ச்சகர்கள், பட்டாச்சாரியர்கள் ஆகியோருக்கு தமிழக அரசு அறிவித்தபடி 4 ஆயிரம் ரூபாய் மற்றும் அரிசி, காய்கறி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. அறநிலையத்துறை சார்பாக நடந்த இந்த நிகழ்ச்சிக்கு கோவில் செயல் அலுவலர் குமரன் தலைமை தாங்கினார்.
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தமிழ்மணி, திருக்கழுக்குன்றம் பேரூர் தி.மு.க. செயலாளர் யுவராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு அழைப்பாளர்களாக காஞ்சீபுரம் எம்.பி.செல்வம், திருப்போரூர் எம்.எல்.ஏ.,
எஸ்.எஸ்.பாலாஜி ஆகியோர் கலந்துகொண்டு அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்களுக்கு தமிழக அரசின் உதவித்தொகை மற்றும் நிவாரண பொருட்களை வழங்கினர்.
Related Tags :
Next Story